Enable Javscript for better performance
கடலூரில் திறக்கப்பட்ட மீன் சந்தைகள் முழுமையாக பயன்பாட்டுக்கு வருமா?- Dinamani

சுடச்சுட

    

    கடலூரில் திறக்கப்பட்ட மீன் சந்தைகள் முழுமையாக பயன்பாட்டுக்கு வருமா?

    By கடலூர்  |   Published on : 21st March 2016 07:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூரில் 3 மீன்மார்க்கெடுகள் திறக்கப்பட்டும் முழுமையாக செயல்பாட்டுக்கு வராத நிலையில் உள்ளன.

    மீன்பிடித் தொழிலை முக்கிய தொழிலாகக் கொண்டு திகழும் கடலூர் நகரில் பிடிக்கப்படும் மீன்கள் ஆங்காங்கே சாலையோரங்களில் வைத்து விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுகாதாரமான முறையில் நவீன வசதிகளுடன் கூடிய மீன் விற்பனை அங்காடிகள் அமைத்திட மத்திய அரசு மற்றும் தமிழக மீன்வளத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதன்படி, கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா சந்தையில் மீன் விற்பனைக் கூடத்துக்கென தனியாக ரூ.55 லட்சத்தில் 55 கடைகளும், திருப்பாதிரிபுலியூர் பான்பரி சந்தையில் ரூ.70 லட்சத்தில் 90 கடைகளும், தேவனாம்பட்டினத்தில் ரூ.50 லட்சத்தில் 35 கடைகளும் கட்டப்பட்டன. கடந்த 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமானப்பணி 2016ஆம் ஆண்டில் நிறைவு பெற்று பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது.

     ஆனாலும் பெரும்பாலும் இந்த விற்பனை அங்காடிகள் திறக்கப்படுவதில்லை என்பதே மீன் வியாபாரிகளின் புகாராக உள்ளது. பெரும்பாலான அங்காடிகளில் முழுமையாக பணிகள் முடிக்கப்படாமல் திறக்கப்படவில்லையெனக் கூறப்படுகிறது. இதனால் வியாபாரிகள் சந்தைக்கு வெளியிலும், ஏற்கெனவே பயன்படுத்திய இடத்திலும் வியாபாரம் செய்கின்றனர். ரூ.1.75 கோடியில் கட்டப்பட்ட மீன்அங்காடிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai