Enable Javscript for better performance
கல்விக் கட்டண உயர்வு பரிந்துரை: தவாக மாணவரணி எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    கல்விக் கட்டண உயர்வு பரிந்துரை: தவாக மாணவரணி எதிர்ப்பு

    By நெய்வேலி  |   Published on : 21st March 2016 07:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்வி நிறுவனங்களில் கட்டண உயர்வுக்கான பரிந்துரைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவரணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

    சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நெய்வேலி 22ஆவது வட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலச் செயலர்கள் அருள்பாபு, பிரகாஷ் தலைமை வகித்தனர். நகரச் செயலர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் முத்துக்குமார் வரவேற்றார். மாநில நிர்வாகிகள் திருபுவனச் சக்கரவர்த்தி, கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றுப் பேசினார்.

     கூட்டத்தில், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் போட்டியிட வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் புதிய நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்தக் கூடாது. ஐஐடி, என்ஐடி உள்ளிட்டக் கல்வி நிறுவனங்களில் 200 சதவிகித கல்விக் கட்டண உயர்வுக்கான பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக் கூடாது என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

     நகரத் தலைவர் ஞானப்பிரகாசம், செயலர் ராஜ்குமார், மாவட்ட மாணவரணி துணைச் செயலர் தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவரணித் தலைவர் ராஜசேகர் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai