சுடச்சுட

  

  கல்வி கட்டண உயர்வு பரிந்துரையை ஏற்கக் கூடாது: தவாக

  By நெய்வேலி  |   Published on : 21st March 2016 07:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் சேர்க்கைக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்தும் பிரிந்துரையை மத்திய அரசு ஏற்கக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

  இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஏழை, எளிய மக்களின் உயர் கல்விக் கனவை தகர்க்கும் வகையில் ஐஐடி இயக்குநர்கள் குழுவானது ஐஐடி, என்ஐடி கல்விக் கட்டணத்தை 200 மடங்கு உயர்த்த பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசு இந்த பரிந்துரையை ஏற்கக் கூடாது. மேலும் புதிய நுழைவுத் தேர்வு முறையையும் நடைமுறைப்படுத்தக்கூடாது.  இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai