Enable Javscript for better performance
குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    கடலூரில் குருத்தோலை ஞாயிறு தின ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வரும் புனித கடமைகளில் ஒன்று தவக்கால நோன்பாகும். கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தவக்கால நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    40 நாள்கள் தொடரும் தவக் காலத்தின் நிறைவாக புனித வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    புனித வாரமானது ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனியுடன் தொடங்கியது.

     அதன்படி, கடலூர் கடற்கரைச் சாலை இளங்குரு மடத்திலிருந்து பங்குத் தந்தை அந்தோணிசாமி தலைமையில் கிறிஸ்தவர்கள் மந்திரிக்கப்பட்ட குருத்தோலைகளை கைகளில் ஏந்தி ஓசன்னா கீதங்கள் பாடி ஊர்வலமாக புனித கார்மேல் அன்னை ஆலயத்துக்கு சென்றனர்.  அதனையடுத்து தேவாலயத்தில் கூட்டுத் திருப்பலியும், சிறப்புப் பிரார்த்தனைகளும் நடைபெற்றன. இதேபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

     புனித வாரத்தின் 2ஆம் நிகழ்வாக பெரிய வியாழன் மார்ச் 24ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்று இயேசு நாதர் 12 சீடர்களின் பாதங்களை கழுவி தனது பணிவை வெளிப்படுத்தியதை நினைவுக்கூரும் வகையில், தேவாலயங்களில் பாதிரியார்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பேரின் பாதங்களை கழுவும் நிகழ்வு நடைபெறும்.

     நள்ளிரவில் நற்கருணை ஆராதனையும், மார்ச் 25ஆம் தேதி திவ்ய நற்கருணை ஆராதனையும் நடைபெறும். அன்று மாலை சிலுவைப் பாதை ஜெப வழிபாடுகளும், ஆண்டவரின் திருப்பாடு வழிபாடுகளும் நடைபெறும். மார்ச் 26ஆம் தேதி பாஸ்கா எனும் உயிர்ப்பு திருவிழா நிகழ்வுகள் தொடங்கப்பட்டு, நள்ளிரவில் ஈஸ்டர் எனும் உயிர்ப்பு பெருவிழா திருப்பலியும், ஆராதனையும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் நிறைவு பெறும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai