சுடச்சுட

    

    கோடை வெயிலின் தாக்கம்: கடற்கரையில் குவியும் மக்கள்

    By கடலூர்  |   Published on : 21st March 2016 07:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்கும் வகையில் வெள்ளிக் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் திரளானோர் குவிந்தனர்.

    மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனினும் மாலை நேரத்தில் கடற்கரையிலிருந்து வீசும் காற்றினால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைகிறது.

    பொதுமக்களும் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்புவதற்காக தர்பூசணி பழங்களை சாப்பிட்டும், இளநீர், குளிர்பானங்கள் அருந்தியும் வருகின்றனர். கடலூர் நகர மக்கள் வெள்ளிக் கடற்கரைக்குச் சென்று தங்களை ஆசுவாசப்படுத்தி வருகின்றனர். இதன்படி ஞாயிற்றுக்கிழமை ஏராளமானவர்கள் கடற்கரையில் குவிந்து பொழுதைக் கழித்தனர்.  பொதுமக்களை உற்சாகப்படுத்தும் வகையில் கடற்கரையில் குதிரை, ஒட்டகச் சவாரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai