சுடச்சுட

  

  பண்ருட்டி அருகே தீ விபத்தில் 4 குடிசைகள் எரிந்து சேதமடைந்தன.

  பண்ருட்டி ஒன்றியம், பழைய பிள்ளையார்குப்பம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். விவசாயி. இவரது குடிசை வீட்டின் மேல்பகுதியில் மின்கம்பி செல்கிறது. ஞாயிற்றுக்கிழமை மின்கம்பிகள் உரசியதில் தீப்பொறி ஏற்பட்டு முத்துக்கிருஷ்ணனின் குடிசை மீது விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும், அருகில் உள்ள பரமசிவம், கலியமூர்த்தி, கந்தவேல் ஆகியோரது குடிசைகளிலும் தீ பரவியது.

   இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி மற்றும் முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். இச்சம்பவத்தில் குடிசைகளை இழந்தவர்கள், அருகில் உள்ள அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

  இவர்களுக்கு அரசு நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டப் பொருள்களை பண்ருட்டி வட்டாட்சியர் கீதா வழங்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai