பிரியாணி விருந்து: பாமக நிர்வாகி மீது வழக்கு
By நெய்வேலி | Published on : 21st March 2016 07:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
முத்தாண்டிக்குப்பத்தில் பிரியாணி விருந்து வழங்கியது தொடர்பாக பாமக நிர்வாகி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நெய்வேலி தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பில் முத்தாண்டிக்குப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், உரிய அனுமதி பெறாமலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியும் பிரியாணி விருந்து வழங்கப்பட்டதாம்.
இதுகுறித்து தகவல் அறிந்த மருங்கூர் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதரன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். மேலும், முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் பாமக மேற்கு ஒன்றியச் செயலர், வீரசிங்கன்குப்பத்தைச் சேர்ந்த கணேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.