சுடச்சுட

    

    மீனவர் கொலை: உறவினர்கள் சாலை மறியல்: போலீஸார் தடியடி

    By கடலூர்  |   Published on : 21st March 2016 07:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மீனவர் கொலை சம்பவத்தை அடுத்து உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அரசுப் பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டதை அடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

    கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்தவர் தமிழ்பாலன் மகன் பிரதீப் (24). மீனவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், கண்ணன் மற்றும் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்

    களுடன் மீன்பிடிப்பதற்காக படகில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டம் பழையாறுக்குச் சென்றிருந்தார்.

     அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. இதில் பிரதீப், சந்தோஷ், கண்ணன் ஆகியோர் காயமுற்றனர். பலத்த காயமுற்ற பிரதீப் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மருக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அங்கு சனிக்கிழமை உயிரிழந்தார்.

     இதையடுத்து அவரது சடலம் ஞாயிற்றுக்கிழமை கடலூர் பச்சையாங்குப்பத்துக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, கடலூர்-சிதம்பரம் சாலையில் முதுநகரில் குவிந்த பிரதீப்பின் உறவினர்கள், மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பிரச்னை தொடர்பாக சிலரைப் பிடித்து விசாரித்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

     எனினும், பிரதீப்பின் உறவினர்கள் மறியலை கைவிட மறுத்தனர்.  அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த 2 அரசுப் பேருந்துகளின் மீது கற்கள் வீசப்பட்டன. இதில், பேருந்தின் ஓட்டுநர் உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர். இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

     மேலும், மறியலில் ஈடுபட்டவர்கள் துறைமுகம் பகுதியில் சில வீடுகளின் மீதும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே பிரதீப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai