Enable Javscript for better performance
வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான்- Dinamani

சுடச்சுட

    

    கடலூரில் வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையம் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடலூர் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நேரு இளையோர் மையம் மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மினி மாரத்தான் ஓட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

     நகர அரங்கில், மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.சுரேஷ்குமார் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்து பங்கேற்றார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 100 சதவிகிதம் வாக்குப்பதிவை அடைவதற்காக கலை நிகழ்ச்சிகள், கல்லூரிகளில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொள்ளுதல், ஊர்வலம், கிராமங்களில் வீடு, வீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் அளித்தல் போன்ற பணிகளில் மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும், கிராம அளவில் குழுக்களை ஏற்படுத்தி விழிப்புணர்வுப் பணியும் நடைபெறுகிறது என்றார்.

     மாரத்தான் ஓட்டம் வெள்ளிக் கடற்கரையில் நிறைவு பெற்றது. இதில், முதல் பரிசை இ.அசோக்குமார் வென்றார். 2ஆவது இடத்தை வருண்ஸ்ரீவர்தன், 3ஆவது இடத்தை ரகுராம் ஆகியோர் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசளித்தார். ஷ் நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார், வருவாய் கோட்டாட்சியர் நா.உமாமகேஸ்வரி, வட்டாட்சியர் அர.அன்பழகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, இளையோர் மன்ற கணக்காளர் டி.சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai