Enable Javscript for better performance
2021இல் இந்து மக்கள் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்: அர்ஜுன் சம்பத்- Dinamani

சுடச்சுட

    

    2021இல் இந்து மக்கள் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்: அர்ஜுன் சம்பத்

    By நெய்வேலி  |   Published on : 21st March 2016 07:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் 2021இல் இந்து மக்கள் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

    பண்ருட்டியில் கட்சியின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் பொதுக்குழுக் கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.கே.தேவா தலைமை வகித்தார். பொதுச் செயலர் ஆர்.சரவணன், பண்ருட்டி நகரச் செயலர் கண்மணி முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் ஆர்.அன்பரசன் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பங்கேற்றார். பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இந்துத்துவா அரசியல் புரட்சிப் பயணம் நடைபெற்று வருகிறது. பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் இந்து மக்கள் கட்சி போட்டியிடும்.

    எங்களது தேர்தல் அறிக்கையில், கள் உணவின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டு, பூரண மதுவிலக்கு கொண்டுவருவது, பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும். 2016 தேர்தலில் சட்டப் பேரவையில் இடம் பிடிப்போம். 2021இல் தமிழகம் மற்றும் புதுவையில் ஆட்சியைப் பிடிப்போம் என்றார் அவர். கூட்டத்தில், புதுச்சேரி மாநிலத் தலைவர் கி.மஞ்சினி, மாநில இளைஞரணிச் செயலர் மனோகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai