Enable Javscript for better performance
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    நீர்வள ஆதாரங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, உலக தண்ணீர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் கல்வி ஒருங்கிணைப்பாளர் எபனேசர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலகில் தற்போது குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. தட்ப வெட்ப நிலைகளை மாசுபடுத்துதல், குடிநீரை வீணாக்குதல் போன்ற செயலால் இந்தப் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, தண்ணீரை சேமிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

    இதற்காக அணைகள், ஏரிகள், குளங்கள் அமைத்தால் மட்டும் போதுமானதல்ல. நாம் ஒவ்வொருவரும் தண்ணீர் மேலாண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக வீடுகளில் நீர்க் கசிவுகளை சரி செய்தல், தண்ணீரை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

    எதிர்காலத்தில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழலை தவிர்க்க தற்போது முதலே தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai