Enable Javscript for better performance
பெண்களுக்கான தனி வாக்குச் சாவடிக்கு இடங்கள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    பெண்களுக்கான தனி வாக்குச் சாவடிக்கு இடங்கள் தேர்வு

    By கடலூர்  |   Published on : 22nd March 2016 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டத்தில் மாதிரி வாக்குச் சாவடிகள் மற்றும் பெண்கள் மட்டுமே பணியாற்றும் பெண்களுக்கான தனி வாக்குச் சாவடிகள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குகள் பதிவாகும் வகையில் வாக்காளர்களைக் கவர்ந்திட பல்வேறு வழிமுறைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

    அதற்காக அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய, முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

    மேலும், வாக்குச்சாவடி அலுவலர்கள் முதல் காவலர்கள் வரை அனைவரும் பெண்களாகவே பணியாற்றிடும் வகையில் பெண்களுக்கான தனி வாக்குச் சாவடியும் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த வாக்குச் சாவடிகள் தொகுதிக்கு ஒன்று வீதம் மாவட்டத்தில் தலா 9 வாக்குச் சாவடிகள் அமைப்பதற்கான இடத்தை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வு செய்து வந்தனர்.

    இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள வாக்குச் சாவடிகள் குறித்து தேர்தல் ஆணைய அலுவலர்கள் கூறியதாவது:

    திட்டக்குடி (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் மாதிரி வாக்குச் சாவடியாக இறையூர் அருணா சர்க்கரை ஆலை வாக்குச்சாவடியும், பெண்கள் மட்டுமே பணியாற்றும் வாக்குச் சாவடியாக திட்டக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியும் தேர்வாகியுள்ளன.

    விருத்தாசலம் தொகுதியில் அரசு மகளிர் பள்ளி (மாதிரி வாக்குச்சாவடி), பூந்தோட்டம் நகராட்சி ஆரம்பப் பள்ளி (பெண்கள் வாக்குச்சாவடி), நெய்வேலி தொகுதியில் கேந்திரிய வித்யாலயா (மாதிரி வாக்குச்சாவடி), ஜவஹர் பள்ளி (பெண்கள் வாக்குச்சாவடி), பண்ருட்டி தொகுதியில் சின்னப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி (மாதிரி வாக்குச்சாவடி), அங்குசெட்டிப்பாளையம் அரசு மகளிர் பள்ளி (பெண்கள் வாக்குச்சாவடி).

    கடலூர் தொகுதியில் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் பள்ளி (மாதிரி வாக்குச்சாவடி), வண்டிப்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளி (பெண்கள் வாக்குச்சாவடி), குறிஞ்சிப்பாடி தொகுதியில் பேரூராட்சி அலுவலகம் (மாதிரி வாக்குச்சாவடி), விருப்பாட்சி வள்ளலார் உதவிபெறும் பள்ளி (பெண்கள் வாக்குச்சாவடி), சிதம்பரம் தொகுதியில் பி.முட்லூர் அரசுப் பள்ளி (மாதிரி வாக்குச்சாவடி), அம்மாப்பேட்டை வீனஸ் நர்சரி பள்ளி (பெண்கள் வாக்குச்சாவடி).

    புவனகிரி தொகுதியில் மேல்புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியே மாதிரி வாக்குச்சாவடி மற்றும் பெண்களுக்கான வாக்குச் சாவடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் பர்வதராஜகுலம் மேல்நிலைப்பள்ளி (மாதிரி வாக்குச்சாவடி), அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெண்கள் வாக்குச்சாவடியாக தேர்வு

    செய்யப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai