சுடச்சுட

    

    கடலூர் மத்திய சிறையில் செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு சிறை அலுவலர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்கம் போல் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இணைப்புச் சிறை வளாகத்திலுள்ள தண்ணீர் தொட்டி அருகே செல்லிடப்பேசி மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். சிறை அலுவலர்கள் விசாரித்ததில் அந்த செல்லிடப்பேசியை, அங்கு அடைக்கப்பட்டிருந்த

    சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த கைதி சுரேஷ் (35) என்பவர் பயன்படுத்தியது தெரியவந்ததாம்.

    இதனையடுத்து செல்லிடப்பேசியை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து சிறை அலுவலர் வாசுதேவன் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai