Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகளுக்கு 2,122 வாக்குச் சாவடி மையங்களில் சாய்வுதள வசதி- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகளுக்கு 2,122 வாக்குச் சாவடி மையங்களில் சாய்வுதள வசதி

    By கடலூர்  |   Published on : 22nd March 2016 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக 2,122 வாக்குச்சாவடி மையங்களில் சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

    அதற்காக விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதனடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகளையும் மாவட்ட தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

    அதன்படி, மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் வாக்களிக்கும் 234 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு 3 சக்கர சைக்கிளில் சென்று வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல் மொத்தமுள்ள 2,256 வாக்குச்சாவடி மையங்களில் தற்போது 2,122 வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் எளிதில் சென்று வரும் வகையில்

    சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

    மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் சாய்வுதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

    மேலும், மாவட்டத்தில் வசித்து வரும் 18 வயது பூர்த்தியடைந்த மாற்றுத்திறனாளிகள், பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தங்களது பகுதிக்குள்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த மையத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். அப்போது ஒரு புகைப்படம், குடும்ப அட்டை நகலுடன் படிவம்-6ஐ பூர்த்தி செய்து சமர்ப்பித்து வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai