சுடச்சுட

  

  விடுதிகளில் தங்கும் அயல்நாட்டினர் விவரம் தெரிவிக்க வேண்டும்:எஸ்பி அறிவுறுத்தல்

  By கடலூர்  |   Published on : 22nd March 2016 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விடுதிகள், வீடுகளில் தங்கும் வெளிநாட்டினர் குறித்த விவரங்களை அதன் உரிமையாளர்கள் காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் கூறினார்.

  கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள், தனியார் இல்லங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவன உரிமையாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசுகையில், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 35 நாடுகளைச் சேர்ந்த 1,111 வெளிநாட்டினர் இன்பச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா, கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, உறவினரை பார்க்க வருதல், மருத்துவ சிகிச்சை போன்ற பல்வேறு காரணங்களுக்காக வந்து தங்கியுள்ளனர்.

  எனவே, பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் அயல்நாட்டு மாணவர்கள் குறித்த விவரத்தை எஸ் படிவம் மூலம் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். உறவினர்கள் மற்றும் விடுதி, நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் அடைக்கலம் கொடுத்தவர்கள் அயல்நாட்டினர் குறித்த விவரத்தை சி படிவம் மூலமாக 24 மணி நேரத்தில் பதிவு செய்ய வேண்டும்.

  மேலும், வீடுகளில் தங்கும் வெளிநாட்டினர், வெளிநாட்டினரை திருமணம் செய்து இங்கு தங்கக் கூடியவர்கள், வெளிநாட்டில் பிறந்து இங்கு பெற்றோர் அல்லது உறவினரிடம் தங்கி படிக்கக் கூடிய குழந்தைகள் ஆகியோரின் விவரங்களையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலுள்ள அயல்நாட்டினர் பிரிவில் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.

  கூட்டத்தில் தேசிய தகவல் மைய அலுவலர் சுப்புராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ராமசாமி, பாலசுப்பிரமணியன் ஆகியோரும் பேசினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai