சுடச்சுட

    

    திட்டக்குடியில் உள்ள அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோயிலில் திங்கள்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இந்தக் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் 7ஆம் நாள் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை சுவாமி-அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு அம்மனுக்கும், சிவனுக்கும் பால், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

    பின்னர் அம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மணக்கோலத்தில் மேளதாளங்களுடன் கோயிலில் அமைக்கப்பட்டிருந்த மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார்.

    தொடர்ந்து மணமேடையில் அமைக்கப்பட்டிருந்த வேள்வி குண்டத்தில் ஹோமம் வளர்க்கப்பட்டு அம்மன், மூலவருக்கு திருமாங்கல்ய பூஜை நடைபெற்றது. பின்னர், மணமேடையில் நாகஸ்வரம், மேள, தாளங்கள் முழங்க தண்டபாணி குருக்கள், திருஞானசம்பந்தம் தலைமையிலான வேத விற்பன்னர்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து மாலை மாற்றுதல், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். மேலும், கன்னிப் பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டி சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம், வடை, பாயாசத்துடன் திருமண விருந்து வழங்கப்பட்டது.

    விழாவில் எளம்பலூர் மகா சித்தர்கள் அறக்கட்டளை ராஜ்குமார் குருஜி, தொழிலதிபர் பி.டி.ராஜன், வணிகர் சங்க மாநில இணைச் செயலர் டி.எம்.தங்கராசு, கோயில் ஆய்வாளர் பழனியம்மாள், நிர்வாக அலுவலர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai