சுடச்சுட

    

    அண்ணாமலைப் பல்கலை.யில் தேசியக் கருத்தரங்கம்

    By சிதம்பரம்  |   Published on : 23rd March 2016 04:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கட்டடவியல் துறை சார்பில் தேசிய அளவிலான மாணவர்கள் கருத்தரங்கு "ஸ்ட்ரெஸ் 2ஓ16' என்ற தலைப்பில் அண்மையில் நடைபெற்றது.

    கருத்தரங்கை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசினார். 

    பொறியியல் புல முதல்வர் செ.அந்தோணி ஜெயசேகர் தலைமை வகித்துப் பேசினார். முன்னதாக கட்டட அமைப்பியல் துறைத் தலைவர் ராம.செந்தாமரை வரவேற்றார்.

    கருத்தரங்கு நிறைவு விழாவில் பதிவாளர் க.ஆறுமுகம் பங்கேற்று நிறைவுரையாற்றினார். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினார். கருத்தரங்கில் எவர்சென்டய்  எனும் கட்டட நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலைவர் (பொறியியல்) அன்பு ஜெயபாலன் பங்கேற்று, உயரமான கட்டடம் கட்டுவதில் நவீன தொழில்நுட்பம் குறித்து விரிவுரையாற்றினார்.

    கருத்தரங்கில் 45 பொறியியல் கல்லூரிகளிலிருந்து 76 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை மாணவர் மன்ற பொறுப்பாளர்கள் செய்தனர். துணைப் பேராசிரியர் ஜெ.சரவணன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai