சுடச்சுட

  

  பண்ருட்டி பணிக்கன்குப்பம் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு, கல்விக் கட்டணம் அதிகம் வசூலிப்படுவதாகவும், விடுதியில் தரமில்லாத உணவு வழங்கப்படுவதாகவும், எஸ்சி, எஸ்டி, மாணவர்களுக்கு அரசு உத்தரவுப்படி திருப்பி தர வேண்டிய கல்விக் கட்டணத்தை விரைந்து வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியறுத்தி கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இவர்களிடம் பண்ருட்டி டிஎஸ்பி இளங்கோவன், வட்டாட்சியர் கீதா, கல்லூரி புல முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு வகுப்புகளுக்குச் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai