சுடச்சுட

  

  சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக வனநாள் விழா விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் மரக்கன்று நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

  உலக வனநாளை முன்னிட்டு மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், உதவித் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். ஆசிரியர்கள் சசிகுமார், கிருஷ்ணவேணி, ராஜராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  தலைமை ஆசிரியை கோமதி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம், மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

  விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் குழுவினர் ராஜராஜேஸ்வரி, அனிதாராஜ், பாண்டிசெல்வி ஆகியோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai