சுடச்சுட

    

    கடலூரில் முன்னாள் படைவீரர்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

    தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் காவலர்களுடன் இணைந்து முன்னாள் படைவீரர்கள், முன்னாள் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    இதன்படி கடலூர் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் காவலர்கள், 450 ஊர்க்காவல் படையினர் பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும், பாதுகாப்புப் பணியில் முன்னாள் படை வீரர்களை ஈடுபடுத்தும் வகையில் அவர்களின் கருத்துக்கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட எஸ்பி செ.விஜயக்குமார் தலைமையில் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

    இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமென முன்னாள் படைவீரர்கள் நலன் துணை இயக்குநர் போனிவின்சென்ட் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai