சுடச்சுட

  

  கடலூர் அரசு மருத்துவமனைக்கு மத்திய அரசின் விருது

  By கடலூர்  |   Published on : 23rd March 2016 04:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது.

  தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய அளவில் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பராமரிக்கப்படும் சுகாதாரம், சுற்றுப்புற தூய்மை மற்றும் நோய் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

  இதில், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை தமிழ்நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளதாகத் தேர்வு செய்யப்பட்டது.

  இதற்காக தில்லியில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசின் உயரிய விருதான காயக்கல்ப் விருது, கேடயம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது.

  தேசிய தரக் கட்டுப்பாட்டுச் சான்று: கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனையானது 1907ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் 14.5 ஏக்கர் பரப்பில் 588 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.

  இங்கு மாதந்தோறும் 450 முதல் 550 பிரசவங்களும், தினசரி 4,000 முதல் 5,000 நபர்கள் வரை வெளி, உள்நோயாளிகளாகவும் வந்து செல்கின்றனர். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  இந்த மருத்துவமனையின் பணிகளை தேசிய தரக் கட்டுப்பாட்டு கழகத்தின் நுண் ஆய்வுக்குழு ஆய்வு செய்து முற்போக்கான தேசிய தரச்சான்றிதழ் வழங்கி சிறப்பித்துள்ளது.

  இந்தச் சான்றிதழ் 2017ஆம் ஆண்டு வரையில் நடைமுறையில் இருக்கும். 

  மருத்துவமனை பெற்ற சிறப்பு விருது மற்றும் சான்றுக்கான பாராட்டும் நிகழ்ச்சி ஆட்சியரது முகாம் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  இதில், மருத்துவமனையின் செயல்பாட்டினை ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் பாராட்டியதோடு, இச்சேவை தொடர்ந்து சிறப்பாக நடைபெற வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

  நிகழ்ச்சியில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் எஸ்.வித்யாசங்கர், நிலைய மருத்துவர் ஏ.சண்முகக்கனி, மருத்துவ கண்காணிப்பாளர் எஸ்.ஹபிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai