சுடச்சுட

  

  கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த இளம் ஜோடியினரின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

  பண்ருட்டி வட்டம், கீழிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகர் (55). விவசாயி. இவருக்குச் சொந்தமாக நிலம் தாழம்பட்டு எல்லையில் உள்ளது. அங்குள்ள தண்ணீரில்லாத கிணற்றில், பழுதான குழாயை சரிசெய்யும் பணிக்காக, அதே பகுதியைச் சேர்ந்த சந்தானம் என்பவர் செவ்வாய்க்கிழமை கிணற்றுக்குள் இறங்கினார். அப்போது, கிணற்றில் ஆண், பெண் இருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்ததாம்.

   இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பழனிசாமிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அளித்த தகவலின் பேரில், பண்ருட்டி டிஎஸ்பி இளங்கோவன் மற்றும் காடாம்புலியூர் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

   பண்ருட்டி தீயணைப்புத் துறை போக்குவரத்து அலுவலர் ஆனந்தன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து, கிணற்றிலிருந்து 2 சடலங்களையும் மீட்டனர்.

  இதையடுத்து உடற்கூறு ஆய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு சடலங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

   போலீஸார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் தாழம்பட்டு கிழக்கு தெருவைச் சேர்ந்த கணேசன் மகள் செளந்தர்யா, மணி மகன் ரகுபதி என தெரியவந்தது. இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், கடந்த 4 நாள்களுக்கு முன் இருவரும் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai