திட்டக்குடியில் காங்கிரஸார் ஆலோசனை
By கடலூர் | Published on : 23rd March 2016 04:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மங்களுர் வட்டார எஸ்சி பிரிவு தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் காமராஜ், நல்லூர் வட்டாரத் தலைவர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திட்டக்குடி (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை வெற்றிபெற வைப்பது என்பது உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நல்லூர் வட்டாரத் தலைவர் கந்தசாமி, திட்டக்குடி நகரத் தலைவர் வேல்சடையப்பன், மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன், சேவாதள தொகுதி தலைவர் முருகன், மாவட்டச் செயலர்கள் கண்ணன், வெங்கடேசன், இளங்கோவன் உட்பட பலர் பேசினர்.
முடிவில் வட்டாரத் துணை தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.