Enable Javscript for better performance
தொழில் பயிற்சி மையக் கட்டடம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    நெய்வேலியில் புனரமைக்கப்பட்ட தொழிற் பயிற்சி மையக் கட்டடத்தை என்எல்சி தலைவர் சரத்குமார் ஆச்சார்யா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

    என்எல்சி நிறுவனத்துக்கு நிலம், வீடு வழங்கியவர்களின் வாரிசுகள், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு அந்நிறுவனத்தில் சமூகப் பொறுப்புணர்வுத் துறையின் மூலம் பல்வேறு தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மின்னணு சாதனங்கள், இயந்திரங்கள் பழுது நீக்குதல், தையல் கலை, கணினி பயன்பாடு, அழகுக் கலை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

    இந்தப் பயிற்சிகள் நெய்வேலி மகளிர் மன்ற அலுவலகத்தில் அளிக்கப்பட்டு வந்தன.

    இந்நிலையில் தொழில் பயிற்சிகளை அளிப்பதற்காக, வட்டம் 9இல் உள்ள தையல் பயிற்சி மையம் அனைத்து வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. என்எல்சி தலைவர் சரத்குமார் ஆச்சார்யா, மகளிர் மன்றத் தலைவி யோகமாயா ஆச்சார்யா ஆகியோர் பங்கேற்று மையத்தை திறந்து வைத்தனர்.  நிகழ்ச்சியில் சரத்குமார் ஆச்சார்யா பேசியதாவது:

    ஆண்-பெண் இருபாலரையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்ற நோக்கில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. நெய்வேலி மகளிர் மன்றம் மேற்கொண்டுள்ள முயற்சிகள், பெண்களுக்கு சமூக மற்றும் பொருளாதார சுதந்திரத்தை வழங்கும். சிறப்பு பயிற்சிகள் வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்.

    இதற்கு என்எல்சி நிர்வாகம் அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும் என்றார். மேலும், பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    விழாவில், என்எல்சி இயக்குநர்கள் ராக்கேஷ்குமார், தங்கபாண்டியன்,     செல்வகுமார், கஞ்சன் ராக்கேஷ்குமார், சாந்தி செல்வகுமார், இந்து ஷிவ்ராஜ் சிங், மகளிர் மன்றச் செயலர் வித்யா பட்டீல், மக்கள் தொடர்பு, கல்வி மற்றும் சமூகப் பொறுப்புணர்வுத் துறை தலைமைப் பொது மேலாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai