சுடச்சுட

  

  சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள பாண்டியநாயகம் கோயிலின் பங்குனி உத்திரத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

  நடராஜர் கோயிலின் வடக்கு கோபுரம் அருகே அமைந்துள்ள ஸ்ரீபாண்டியநாயகம் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல்

  தினமும் சுவாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

   இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. கீழரதவீதி தேரடி நிலையில் உள்ள தேரில் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசண்முகசுப்பிரமணியர் எழுந்தருளினார்.

  பின்னர் நான்கு வீதிகளிலும் வலம் வந்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

   புதன்கிழமை சிவகங்கை தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  இக்கோயில் திருப்பணிக்காக கடந்த 10 ஆண்டுகளாக இடிக்கப்பட்ட நிலையில் இருந்தது. தற்போது திருப்பணிக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai