சுடச்சுட

  

  உயர்கல்வி தமிழ்நாடு மாநில சபையின் ஆதரவுடன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலத் துறை நடத்தும் இரு நாள் மென் திறன்களில் புலமை மற்றும் வகுப்பறைத் திறமை தொடர்பான தேசியக் கருத்தரங்கு தொடக்க விழா பல்கலைக்கழக அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

  அண்ணாமலைப் பல்கலைக்கழக கலைப்புல முதன்மையர் ரா.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினார். 

  பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரும், வணிக மேலாண் துறைப் பேராசிரியருமான என்.பஞ்சநதம் கருத்துரையாற்றினார்.

   அவர் பேசுகையில், மென் திறன்கள் மாணவர்களின் ஆளுமைத் திறன் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே, ஆசிரியர்களுக்கும் வகுப்பறையை திறமையாக கையாளுவதற்கு இத்திறன்களில் புலமை அவசியம். இத்தகைய கருத்தரங்குகள் நாடெங்கிலும் உள்ள பேராசிரியர்களும் ஆராய்ச்சி மாணவர்களும் தமது புலமை மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் எனக் குறிப்பிட்டார். 

  முன்னதாக, ஆங்கிலத் துறைத் தலைவர் க.முத்துராமன் வரவேற்றார். ஆங்கிலத் துறை பேராசிரியர் க. ராஜாராமன் கருத்தரங்கு பற்றி குறிப்புரை ஆற்றினார். கருத்தரங்கு அமைப்புச் செயலாளரான ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் எஸ். கார்த்திக்குமார் நன்றி கூறினார்.

  அண்ணாமலைப் பல்கலைக்கழக உளவியல் துறைத் தலைவர் வி.சுரேஷ், மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறைப் பேராசிரியர் எம்.வி.ஸ்ரீராமச்சந்திரசேகரன், தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் மென்திறன் புலமை பற்றி விரிவுரை ஆற்றினர். 

  கருத்தரங்கில் நாடெங்கிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட பேராசிரியர்களும், ஆராய்ச்சி மாணவர்களும் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்ததோடு தமது புதுமையான கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai