சுடச்சுட

  

  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய நிர்வாகிகள் நெய்வேலியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

   கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில், புதிய நிர்வாகிகளான மாநில அமைப்புச் செயலர் கவிஞர் இளமாறன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில அமைப்பாளர் கி.சு.அகத்தியன், மாநில துணைச் செயலர்கள் சரஸ்வதி, புரட்சிவேந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

   நிகழ்ச்சியில் மாவட்ட பொருளர் துரை.மருதமுத்து, நெய்வேலி தொகுதிச்  செயலர் அ.உ.அதியமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   நகர துணைச் செயலர்  இராச.முருகன் வரவேற்றனர். மாநில நிர்வாகிகள் மண்.திருநாவுக்கரசு, மோகன்தாஸ், விடுதலை, தங்க.அறச்செல்வன், த.பன்னீர்செல்வம், கி.அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai