Enable Javscript for better performance
என்.எல்.சி. சுரங்கத்தில் தாமிரக் கம்பி திருடியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    என்.எல்.சி. சுரங்கத்தில் தாமிரக் கம்பி திருடியவர் கைது

    By நெய்வேலி  |   Published on : 24th March 2016 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெய்வேலி சுரங்கப் பகுதியில் தாமிரக் கம்பி திருடியவர் கைது செய்யப்பட்டார்.

    நெய்வேலி, என்எல்சி சுரங்கம்-1, ஆர்.ஆர். யார்டு பகுதியில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை காவலர் சோனிக்குமார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆர்.ஆர். யார்டு பகுதியில் இருந்து 17 மீட்டர் தாமிரக் கம்பியை திருடியதாக ஒருவரை பிடித்து தெர்மல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியதில், தாண்டவன்குப்பம் பெரியண்ணன் மகன் பெரியசாமி (28) என்பது தெரியவந்தது. பின்னர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai