சுடச்சுட

  

  எஸ்.ஐ. கொலை வழக்கில் காதலிக்கு ஆயுள் சிறைத் தண்டனை

  By சிதம்பரம்  |   Published on : 24th March 2016 05:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட அவரது காதலி வனிதாவுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

  விழுப்புரம் மாவட்டம், சேந்தநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பி.கணேசன் (32). இவர் சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக 2014-ஆம் ஆண்டு பணியாற்றினார்.

  அதற்கு முன்பு கிள்ளை காவல் நிலையத்தில் பணியாற்றிய போது, வழக்கு விசாரணைக்காக வந்த சிதம்பரம் அருகேயுள்ள அம்பலத்தாடிகுப்பத்தைச் சேர்ந்த கலைமணி மனைவி வனிதாவுக்கும் (25), கணேசனுக்கும் தொடர்பு ஏற்பட்டது.

  கணேசன், வனிதாவை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்திருந்தார். இந்த நிலையில், கணேசனுக்கு அவரது பெற்றோர் 9-7-2014 அன்று வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தனர். இதையறிந்த வனிதா, கணேசன் மீது ஆத்திரமடைந்தார்.

  திருமணத்துக்குப் பிறகு, சிதம்பரம் அண்ணாமலைநகரில் வசித்து வந்த சக்கரா அவென்யூ வீட்டுக்கு 22-7-2014 அன்று தனியாக வந்த கணேசன், வனிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்தார்.

  அவர் அங்கு சென்று கணேசனுடன் மது அருந்தினார். அவருக்கு மது போதை அதிகமானதும் தான் கொண்டு வந்த கத்தியால் கணேசனை வெட்டிக் கொலை செய்து விட்டு தலைமறைவானர்.

  இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அண்ணாமலைநகர் போலீஸார் வனிதாவை விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை சிதம்பரத்தில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

  வழக்கு விசாரணை முடிவுற்று நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் புதன்கிழமை தீர்ப்பு அளித்தார். தீர்ப்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், வனிதாவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

  இந்த வழக்கில் அரசு வழக்குரைஞர் தேவராஜ் ஆஜரானார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai