சுடச்சுட

  

  ஏப்.15 முதல் கூட்டுறவு முறையில் கேபிள் டிவி நிறுவனம்

  By சிதம்பரம்  |   Published on : 24th March 2016 05:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகம் முழுவதும் தமிழ்நாடு டிஜிட்டல் நெட்வொர்க் என்ற பெயரில் கூட்டுறவு முறையில் கேபிள் டிவி நிறுவனம் வருகிற ஏப்.15 முதல் தொடங்கப்படுகிறது என தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச் சங்க நிறுவனத் தலைவர் பி.சகிலன் தெரிவித்தார்.

  சிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

  நாடு முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பு செய்வது என மத்திய அரசு சட்டம் கொண்டு வந்து, முதல் கட்டமாக பெருநகரங்களில் தொடங்கியுள்ளது.

  இந்தக் கேபிள் நெட்வொர்க் அரசின் கட்டுப்பாட்டில் சென்றால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தமிழகத்தில் அரசே கேபிள் டிவி நிறுவனத்தை தொடங்கியது. அரசு கேபிள் டிவி நிறுவனம் சரியாக இயங்காததால், நாங்களே கூட்டுறவு முறையில் கேபிள் டிவியை நிறுவி செயல்படுத்தி வருகிறோம்.

  வருகிற ஏப்.15 முதல் தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ஈரோடு, கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்பட 12 மாவட்டங்களில் தமிழ்நாடு டிஜிட்டல் நெட்வொர்க் என்ற பெயரில் கேபிள் டிவி நிறுவனத்தை தொடங்குகிறோம். 

  குறைந்தபட்சம் 250 சேனல்கள், ரூ.150-க்கு முதல் கட்டணமாக வழங்குகிறோம். இரு தவணை முறையில் டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் ரூ.1200க்கும் வழங்க உள்ளோம்.  இரண்டாம் கட்டமாக 500 சேனல்கள் ரூ.200 கட்டணத்திலும் வழங்க உள்ளோம். முதல் கட்டமாக 5 லட்சம் செட்டாப் பாக்ஸ் வாங்கவுள்ளோம் என பி.சகிலன் தெரிவித்தார்.

  டிஜிட்டல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு:  சிதம்பரத்தில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் டிஜிட்டல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  எம்.எஸ்.ஜாகீர்உசேன் தலைமை வகித்தார். ஆர்.முத்து வரவேற்றார். தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்க நிறுவனத் தலைவர் பி.சகிலன் சிறப்புரையாற்றினார்.  மாநிலத் தலைவர் டி.ஆறுமுகம், பொதுச் செயலாளர் ஜி.தாமோதரன், பொருளாளர் ஆர்.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர்  பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai