சுடச்சுட

    

    மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக இடையே தேர்தல் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, கடலூரில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

    தேமுதிக ஒன்றியச் செயலர் ஜி.ராயல் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நகரச் செயலர் ஏ.ஜி.தஷ்ணா, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.ஜெயசங்கர், மாவட்ட கேப்டன் மன்றச் செயலர் ஏ.லெனின், நகரத் தலைவர் வி.சி.சரவணன், துணைச் செயலர் எம்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மதிமுக நகரச் செயலர் ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆனந்த், ரமேஷ், தமிழ்மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஜெயசீலன், செந்தில், ஸ்ரீதர், பிரதீப், அலெக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai