Enable Javscript for better performance
சர்வதேச மகளிர் தின விழா- Dinamani

சுடச்சுட

    

    நெய்வேலி என்.எல்.சி. கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில், சர்வதேச மகளிர் தினவிழா அண்மையில் நடைபெற்றது.

     விப்ஸ் எனப்படும் பொதுத் துறையில் பணிபுரியும் மகளிருக்கான அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், என்.எல்.சி. தலைவர் சரத்குமார் ஆச்சார்யா தலைமை விருந்தினராக பங்கேற்றார்.

     கெளரவ விருந்தினர்களாக தொழிலதிபர் மாயா, அவதார் அமைப்பின் நிறுவனர் செளந்தர்யா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

     விழா மலரை நெய்வேலி மகளிர் மன்றத் தலைவி யோகமாயா ஆச்சார்யா வெளியிட, முதல் பிரதியை மாயா, செளந்தர்யா ராஜேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  விழாவில் நெய்வேலி விப்ஸ் அமைப்பு சார்பில், மகாலட்சுமி என்ற மாணவிக்கு கல்வி உதவித் தொகையும், தெய்வானை என்ற பெண்ணுக்கு தையல் இயந்திரமும் வழங்கப்பட்டது.   முன்னதாக, விப்ஸ் அமைப்பின் நெய்வேலி மையத் தலைவி வனஜா வரவேற்றார். பொதுச் செயலர் கலையரசி ஆண்டறிக்கை வாசித்தார்.

     அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தாரிணி மெளலி உறுதிமொழி வாசிக்க, மற்றவர்கள் ஏற்றனர்.  நிகழ்ச்சியில், என்எல்சி இயக்குநர்கள் சுபீர்தாஸ், தங்கபாண்டியன், செல்வகுமார், மனித வளத் துறை செயல் இயக்குநர் முத்து, உயர் அதிகாரிகள் சாந்தி செல்வகுமார், இந்து சிங், விப்ஸ் மற்றும் மகளிர் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai