சுடச்சுட

    

    சிறுமிக்கு பாலியல் தொல்லை: மளிகைக் கடை ஊழியருக்கு 4 ஆண்டு சிறை

    By நெய்வேலி  |   Published on : 24th March 2016 05:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்ற மளிகைக் கடை தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

    கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், லால்பேட்டையைச் சேர்ந்தவர் கமாலுதீன் (55). இவர், கடலூர், புதுப்பாளையத்தில் உள்ள மளிகைக் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 8.1.2015 அன்று மளிகைக் கடை வழியாகச் சென்ற 8 வயது சிறுமியை கடைக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய  முயன்றதாகக் கூறப்பட்டது.

    இதுகுறித்து, சிறுமியின் தந்தை கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து கமாலுதீனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் புதன்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட கமாலுதீனுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி செல்வம் தீர்ப்பு அளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai