சுடச்சுட

    

    தேர்தல் பாதுகாப்பு: முன்னாள் படைவீரர்கள் தேர்வு

    By நெய்வேலி  |   Published on : 24th March 2016 05:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் படைவீரர்கள் 35 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    2016 சட்ட பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் பணியாற்ற முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    அதன்படி, புதன்கிழமை கடலூரில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் முன்னாள் படைவீரர்கள் பங்கேற்றனர். இதில் 35 பேர் தேர்தல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் பணியில் ஓய்வு பெற்ற காவலர்கள், ஊர்க்காவல் படையினர் பங்கேற்க உள்ளன.  அந்த வரிசையில் முன்னாள் படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் காவலர்களுடன் இணைந்து தேர்தல் பணியில் ஈடுபடுவர் என காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார்  தெரிவித்தார்.  கூட்டத்தில், கூடுதல் துணைக் கண்காணிப்பாளர்கள் ராமசாமி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai