சுடச்சுட

  

  பங்குனி உத்திரத் திருவிழா: சிவசுப்பிரமணிய சுவாமிக்கு காவடி, பால்குடம் எடுத்த பக்தர்கள்

  By நெய்வேலி  |   Published on : 24th March 2016 05:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நெய்வேலியில் உள்ள வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

   நெய்வேலியில் உள்ள மிகப் பழைமையான கோயில் வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில். இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையாக என்எல்சி நிர்வாகத்தால் நடத்தப்படும்.    அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 14-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது.  அதைத் தொடர்ந்து தினமும் பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. 10-ம் நாளான புதன்கிழமை பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.

   இதையொட்டி, நெய்வேலி வட்டம் 18-ல் உள்ள பிள்ளையார் கோயில், வட்டம் 27-ல் உள்ள பெருமாள் கோயில் மற்றும் அங்குள்ள சில கோயில்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து வேலுடையான்பட்டு கோயிலில் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். பெண்கள் எடுத்து வந்த பால்குடத்தில் இருந்த பாலால் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பங்குனி உத்திரத் திருவிழாவைக் காண பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் கூடினர்.  நெய்வேலி போலீஸார், பாதுகாப்பு படை வீரர்கள், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

  கடலூர்: கடலூரில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.  கடலூர் வண்டிப்பாளையம், பண்ருட்டி, தொரப்பாடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.

   பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் தேர்த்திக் கடன் செலுத்தினர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai