சுடச்சுட

  

  இணையதள வழியிலான பட்டா மாறுதலுக்கு தமிழ்நிலம் மென்பொருள் புதிதாக வடிவமைக்கப் பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பட்டா மாறுதலுக்கான தமிழ்நிலம் மென்பொருள் இணையதள வசதி புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

   இந்த மென்பொருள் வசதி மாவட்ட ஆட்சியரகம் மற்றும் கடலூர், திட்டக்குடி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், வேப்பூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி மற்றும் புவனகிரி ஆகிய வட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள அரசு இ-சேவை மையங்கள், புதுவாழ்வு மையங்களில் செயல்பாட்டில் உள்ளன.

   எனவே, பொதுமக்கள் அசல் ஆவணங்களை நேரில் சமர்ப்பித்து பட்டா மாறுதல் மனுக்களை இணையதள வழியாக அளிக்கலாம். இந்த மனுக்களை பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புதல் சீட்டு சேவை மையத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும். மனு ஏற்கப்பட்ட விவரம் மனுதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

   பட்டா மாறுதல் ஆணையினை பொது சேவை மையங்களில் மனுதாரர் பெற்றுக்கொள்ளலாம். இந்த பட்டாவில் ணத-இஞஈஉ உள்ளதால் வட்டாட்சியர் கையொப்பம் தேவையில்லை.

   இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai