Enable Javscript for better performance
வாக்குப்பதிவை வலியுறுத்தி என்.எல்.சி. விழிப்புணர்வு- Dinamani

சுடச்சுட

    

    வாக்குப்பதிவை வலியுறுத்தி என்.எல்.சி. விழிப்புணர்வு

    By நெய்வேலி  |   Published on : 24th March 2016 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டி, பங்குனி உத்திரத் திருவிழாவில் (வேலுடையான்பட்டு கோயிலில்) பங்கேற்ற பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், துண்டுப் பிரசுரங்களை என்.எல்.சி. தலைவர் சரத்குமார் ஆச்சார்யா புதன்கிழமை வழங்கி தொடங்கி வைத்தார்.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில், நெய்வேலி தொகுதி முக்கிய தொகுதியாகும். இங்கு சுமார் 71 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

    நெய்வேலி தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற என்.எல்.சி. நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து நடத்த நெய்வேலி நகரியத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பிரத்யேக அலுவலகத்தையும் திறந்துள்ளது.

    இந்நிலையில், புதன்கிழமை வேலுடையான்பட்டு கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது. இங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களிடம் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள் என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. என்.எல்.சி. தலைவர் சரத்குமார் ஆச்சார்யா, அவரது மனைவி யோகமாயா ஆச்சார்யா ஆகியோர் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்வில், நெய்வேலி தொகுதி தேர்தல் அலுவலர் தினேஷ், துணைத் தேர்தல் அலுவலர் மோகன், என்.எல்.சி. மனித வளத் துறை செயல் இயக்குநர் முத்து, மக்கள் தொடர்புத் துறை, கல்வி மற்றும் சமூகப் பொறுப்புணர்வுத் துறை தலைமைப் பொது மேலாளர் ஸ்ரீதர், நெய்வேலி காவல் துணைக் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், என்.எல்.சி. நிறுவன உயர் அதிகாரிகள் மற்றும், வாக்குச்சாவடி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai