வாக்கு எண்ணும் மையம் ஆய்வு
By சிதம்பரம் | Published on : 24th March 2016 05:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சிதம்பரம் அருகேயுள்ள சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை சிதம்பரம் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பி.எஸ்.விஜயலட்சுமி புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யவேண்டிய பணிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து, சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பி.எஸ்.விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் சிதம்பரம் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.சுந்தரவடிவேலு, வட்டாட்சியர் அரங்கநாதன் மற்றும் வருவாய்த் துறையினர் உடன் சென்றனர்.