சுடச்சுட

  

  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை

  By சிதம்பரம்  |   Published on : 24th March 2016 05:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

  மண்டல செயலாளர் சு.திருமாறன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் செ.செல்வமணி வரவேற்றார்.

  கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் பால.அறவாழி, கிழக்கு மாவட்டச் செயலாளர் முல்லைவேந்தன், கடலூர் மக்களவைத் தொகுதி செயலாளர் பா.தாமரைச்செல்வன், சிதம்பரம் மக்களவைத் தொகுதிச் செயலாளர் வ.க.செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  சிறப்பு அழைப்பாளர்களாக மாநில அமைப்புச் செயலாளர் திருமார்பன், தேர்தல் பணி செயலாளர்கள் குணவழகன், ஜவகர், ராஜமாணிக்கம் ஆகியோர் பங்கேற்று கருத்துரையாற்றினர்.

  தொகுதிச் செயலாளர்கள் கங்கை அமரன், கெய்க்வாட்பாபு, சுதாகர், நெடுமாறன், மணவாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  கூட்டத்தில் தேர்தல் நிதி வசூலிப்பது, மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவது எனபன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai