சுடச்சுட

  

  அஞ்சல் சேவை குறைதீர் கூட்டம் வருகிற 28ஆம் தேதி நடைபெறுகிறது.

   இதுகுறித்து, அஞ்சல் துறை கடலூர் கோட்ட கண்காணிப்பாளர் ச.சிவப்பிரகாசம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  மார்ச் மாதத்துடன் நிறைவடையும் காலாண்டுக்கான அஞ்சல் சேவை மக்கள் குறைதீர்ப்பு மன்றத்தின் கூட்டம், கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மார்ச் 28ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

   இந்தக் கூட்டத்தில், கடலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சல் சேவைகளில் வாடிக்கையாளர்களின் பிரச்னைகள், புகார்கள் மற்றும் குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.  கூட்ட விவாதத்துக்கான புகார்கள் மற்றும் குறைகள் ஏதேனும் இருப்பின் அவைகளை அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர், கடலூர் கோட்டம், கடலூர் என்ற முகவரிக்கு மார்ச் 26ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு எழுதி அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai