சுடச்சுட

    

    அதிக பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களால் விபத்து அபாயம்

    By நெய்வேலி  |   Published on : 25th March 2016 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெய்வேலி பகுதியில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது.

    மாவட்டத்தில் நெய்வேலி, பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் உள்ளன.  இதில் பல வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் செல்லப்படுவதாகவும், இதனால் விபத்து அபாயம் நிலவுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

     குறிப்பாக சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு வாகனங்கள் அடிக்கடி செல்கின்றன.

    லாரிகளில் மணிலா மூட்டை, முந்திரி, கரும்பு, வைக்கோல், விறகு, முந்திரி தொளும்பு ஆகியவை அதிக பாரம் ஏற்றிச் செல்லப்படுகிறது.

     இதனால், பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு, எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக

    பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai