சுடச்சுட

    

    அனுமதியின்றி சுவர் விளம்பரம்: ஆட்சியரிடம் பாமக புகார்

    By நெய்வேலி  |   Published on : 25th March 2016 05:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாமக கடலூர் கிழக்கு மாவட்டச் செயலர் சண்.முத்துக்கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரிடம் அளித்துள்ள புகார் மனு:

     தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில் சுத்துக்குளம், சான்றோர்பாளையம், கடலூர் சாவடி உள்ளிட்டப் பகுதிகளில் பாமகவினர் எழுதிய சுவர் விளம்பரங்களை தேர்தல் அதிகாரிகள் அழித்தனர்.

     ஆனால், கடலூர், குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பல கிராமங்களில் அதிமுக, திமுகவினர் அனுமதி பெறாமல் சுவர் விளம்பரம் செய்துள்ளனர்.

    இச்சம்பவம் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நடுநிலையோடு நடந்து கொள்கின்றனரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனவே, அனுமதி பெறாமல் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai