சுடச்சுட

  

  ஆடுகளை திருடியது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

  சிறுபாக்கத்தை அடுத்துள்ள வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயி. புதன்கிழமை இரவு இவரது வீட்டில் கட்டி வைத்திருந்த 2 ஆடுகளை, மர்ம நபர்கள் 2 பேர் திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தூக்கிச் செல்வதை அப்பகுதியினர் பார்த்தனராம்.

  இதையடுத்து கிராம மக்கள் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை துரத்திப் பிடித்தனர். பின்னர் இதுகுறித்து ராமநத்தம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரையும் மீட்டு விசாரித்தனர்.

   விசாரணையில் பிடிபட்டவர்கள் சிறுபாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்(30), அரகலூர் சித்தேரியைச் சேர்ந்த கிரிதர் சர்மா (21) எனத் தெரிய வந்தது.

  இவர்களில் கிரிதர்சர்மா என்பவர் விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றும் முருகன் என்பவரின் மகன் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai