Enable Javscript for better performance
இந்திய குடியரசு கட்சி கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இந்திய குடியரசுக் கட்சியின் கடலூர் சட்டப் பேரவைத் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.

    மாவட்ட துணைத் தலைவர் கே.ஜெயமணி தலைமை வகித்தார். பொருளர் சோ.உத்திரவேல், அமைப்புச் செயலர்கள் வி.ஆனந்தராஜ், வி.சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் பால.வீரவேல் சிறப்புரையாற்றினார்.

     கூட்டத்தில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய குடியரசு கட்சிக்கு சட்டப் பேரவைத் தேர்தலில் 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய அதிமுக பொதுச் செயலரை கேட்டுக்கொள்வது, கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு பிரசாரத்தில் ஈடுபடுவது. சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட உடுமலை சங்கரை கொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     நிர்வாகிகள் எம்.சந்திரன், ஆர்.திருமுருகன், எம்.ராமச்சந்திரன், ஏ.பிரதாப், ஏ.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக ஒன்றியத் தலைவர் எம்.வேலாயுதம் வரவேற்க, நகரத் தலைவர் எம்.குமார் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai