சுடச்சுட

  

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சிற்றூர் சீரமைப்பு சிறப்பு முகாம் புதன்கிழமை தொடங்கியது.

  காடாம்புலியூர் ராஜகுரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.செளந்தரபாண்டியன் தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் குரு.அற்புதவேல் ராஜா வரவேற்றார். பல்கலைக்கழக துணை வேந்தர் செ.மணியன், பதிவாளர் கே.ஆறுமுகம், ராஜகுரு பள்ளித் தாளாளர் சு.குருநாதன், பண்ருட்டி அரசுப் பொறியியல் கல்லூரி புல முதல்வர் ஏ.செந்தில்குமார், காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனை மருத்துவர் சு.மணிபாலன், குள்ளஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரேவதி மணிபாலன் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர்.  மார்ச் 27ஆம் தேதி வரை நடைபெறும் முகாமில், வாழ்க்கைத் திறன் கல்வி கருத்தரங்கு, இலவச பொது மருத்துவ முகாம், தேர்தல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தொடக்க விழா நிகழ்ச்சியின் நிறைவாக, வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் கோ.ரங்கராஜன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai