சுடச்சுட

    

    குறிஞ்சிப்பாடி அருகே ஏரியில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    குறிஞ்சிப்பாடி வட்டம், கன்னித்தமிழ்நாடு கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாதன் மகன் தனசேகர் (20). ஐடிஐ படித்துவிட்டு கூலி வேலை செய்து வந்தார். புதன்கிழமை பெத்தநாயக்கன்குப்பத்தில் உள்ள முருகன் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திரத் திருவிழாவில் பங்கேற்கச் சென்றாராம்.

    பெத்தநாயக்கன்குப்பத்தில் உள்ள ஏரியில் தனசேகர் குளித்துள்ளார்.  அப்போது சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினார். இதையடுத்து அப்பகுதி மக்கள் தனசேகரை மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai