சுடச்சுட

    

    கோரிக்கையை ஏற்பவர்களுக்கு ஆதரவு: மாற்றுத் திறனாளிகள் சங்கம் முடிவு

    By கடலூர்  |   Published on : 25th March 2016 05:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தங்களது கோரிக்கையை ஏற்பவர்களுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிப்பதென கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் முடிவெடுத்துள்ளது.

    சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.கே.சந்தோஷ், பொதுச் செயலர் பொன்.சண்முகம் ஆகியோர் தங்களது கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை வியாழக்கிழமை கடலூரில் வெளியிட்டனர். அதில் மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டப் பேரவை, மக்களவையில் தனித்தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பில் முன்னுரிமை, மருத்துவமனையில் தனி சிகிச்சை பிரிவு, மாற்றுத்திறனாளிகளை தாக்குபவர்கள், இழிவுபடுத்துவோருக்கு தண்டனை வழங்க சிறப்புச் சட்டம், நியாயவிலைக் கடைகளில் சலுகை விலையில் பொருள்கள் வழங்குதல் என்பன உள்ளிட்ட 24 கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

     இந்தக் கோரிக்கைகள் ஒவ்வொரு கட்சியினருக்கும் அனுப்பி வைக்கப்படும். கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவதாக வாக்குறுதி அளிப்பதோடு, அதனை தங்களது தேர்தல் அறிக்கையில் வெளியிடும் கட்சியினருக்கு நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக  அதில் தெரிவித்துள்ளனர்.

     மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.தட்சிணாமூர்த்தி, பொருளர் எம்.வெங்கடேசன், நிர்வாகிகள் பெரியசாமி, தாமஸ், ஆர்.பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai