சுடச்சுட

    

    விருத்தாசலம் வட்டம், மேல்பாப்பணம்பட்டு, ராமானுஜம் நகரைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் தண்டபாணி (44). இவர், பழைய நெய்வேலி புதுத்தெருவைச் சேர்ந்த விஜயகுமார் (34) என்பவரிடம் ஏலச்சீட்டு கட்டி வந்தாராம். சீட்டு முடிந்த பிறகும், அதற்கான தொகையைத் தராமல் விஜயகுமார் காலதாமதம் செய்து வந்தாராம்.

     இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி விஜயகுமாரின் வீட்டுக்குச் சென்ற தண்டபாணி, சீட்டு பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அப்போது, அவரை விஜயகுமார், அவரது தந்தை பாலகிருஷ்ணன் ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். தாக்குதலில் காயமடைந்த தண்டபாணி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து, விஜயகுமாரை வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும் அவரது தந்தை பாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai