சுடச்சுட

    

    பண்ருட்டி அருகே தீக்குளித்தவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

    பண்ருட்டி வட்டம், கட்டமுத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி (45). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுமதியின் கணவர் தட்சிணாமூர்த்தி பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இந்த நிலையில், சுமதிக்கும், அவியனூர், மந்தக்கரையைச் சேர்ந்த தனசேகர் என்பவருக்கும் தகாத பழக்கம் ஏற்பட்டதாம்.

     அண்மையில் சுமதியின் மகனுக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் தனது வீட்டுக்கு வரவேண்டாம் என தனசேகரிடம் சுமதி கூறினாராம். இந்த நிலையில், புதன்கிழமை இரவு சுமதியின் வீட்டுக்கு வந்த தனசேகர், அவரிடம் தகராறு செய்தாராம். அப்போது, சுமதியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றாராம். பின்பு தனசேகர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக்கொண்டு, சுமதியையும் அணைத்துள்ளார். இதில், பலத்த தீக்காயம் அடைந்த தனசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுமதி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

     இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸார், தனசேகரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai