சுடச்சுட

  

  தேர்தல் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் காவல்துறையினருக்கான ஆலோசனைக் கூட்டம் கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

  மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 2,075 காவலர்கள், 450 ஊர்க்காவல் படையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் தெரிவித்திருந்தார். இதன்படி தேர்தல் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் ராணுவத்தினருக்கான ஆலோசனைக் கூட்டம் கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டம் தொடர்பாக முன்னாள் படை வீரர் நலன் அலுவலகம் மூலமாக முறையாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனால், இக்கூட்டத்தின் மூலமாக முன்னாள் ராணுவத்தினர் 35 பேர் தேர்தல் பணியில் ஈடுபட ஆர்வம் தெரிவித்திருந்தனர்.

  இந்த நிலையில், வியாழக்கிழமை முன்னாள் காவல்துறையினருக்கான ஆலோசனைக் கூட்டம் காவலர் நல மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டத்தில் சுமார் 700 பேர் ஓய்வு பெற்ற காவலர்களாக உள்ள நிலையில், இக்கூட்டத்தில் 75-க்கும் குறைவானவர்களே பங்கேற்றனர். இதனால் தேர்தல் பாதுகாப்புப் பணியில் உரிய எண்ணிக்கையில் முன்னாள் காவல்துறையினர் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

   மாவட்டத்தில், மொத்தம் 2,256 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில்,  தற்போது 2,075 காவலர்கள் மட்டுமே உள்ளனர். எனவே, முன்னாள் காவலர்களின் தேவையும், அவர்களின் சேவையும் முக்கியத்துவம் பெறுகிறது. இக்கூட்டத்தில் எஸ்பி எஸ்பி செ.விஜயகுமார் பேசினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai